யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட2ஆம் ஆண்டில் கற்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கேவலமான ராகிங் ஒன்று அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
யாழ் பல்கலைக்கழகத்தின் 2ஆம் வருட விஞ்ஞான பீட மாணவர்கள் கேவலமான பகிடிவதை ஒன்றை மேற்கொள்வதற்காக 1ஆம் வருட மாணவர்களை வெட்டாந்தரையில் முழங்காலில் மண்டியிட்டு இருக்குமாறு செய்துள்ளனர்.
இதன் பின்னர் ஏற்கனவே கலவை செய்யப்பட்டிருந்த மனித மலக்கழிவையும் தவளை ,பாம்பு ,மீன் போன்றவற்றின் அழுகிய உடலங்களின் கரைசல்களை கலந்து மண்டியிட்டிருந்த அப்பாவி ஆண் பெண் முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது ஊற்றி குளிக்க வாத்துள்ளனர்.
அத்துடன் கோதுமை மா,உஜாலா ,தேசிக்காய் போன்றவற்றை ஒன்றாக கல்ந்து பிறிதொரு இரசாயனக்கலவையுடன் சேர்த்து மாணவர்கள் மீது ஊற்றியுள்ளனர்.இதன் போது இவ்வாறு செய்ய வேண்டாம் என 1ஆம் ஆண்டு மாணவர்கள் அழுது குளறியுள்ள போதும் தொடர்ந்து செய்துள்ளனர்.
இந்த கேவலமான செயற்பாடு பலர் பார்த்திருக்க பொது இடத்தில் அரங்கேறியிருக்கிறது.இது பற்றி முதலாம் வருட மாணவர்கள் பீடாதிபதியிடம் முறையிட்ட போதும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கல்வியின் உறைவிடமாக திகழும் யாழ் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான கீழ்தரமான செயல்கள் செய்யப்படுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.