கைவிரலை உடைக்க பார்த்தார், தாக்கவில்லை பிடித்து தள்ளினேன் : மஹிந்த

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Mahinda-Rajapaksa-Attempts-To-Attack-UPFA-Supporter

அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அங்கு வந்திருந்த ஒருவரை தாக்குதல் நடத்தியிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சம்பம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ,

”ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான ஆதரவாளர் ஒருவர் என் மீது கொண்ட பாசத்தால் எனது கையை பிடித்து இழுத்தார். அவர் மதுபோதையில் இருந்திருப்பார் என நினைக்கின்றேன் இதன் போது எனது கைவிரலை உடைய பார்த்தது. எனது கைவிரலை பாதுகாப்பதற்காக நான் அவரை எனது ஒரு கையால் பிடித்து தள்ளினேன். ஆனால் நான் அவரை தாக்கியதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்

Related Posts