Ad Widget

தேர்தல் பரப்புரைக்கு மத தலங்களை பயன்படுத்த வேண்டாம் – தேர்தல் திணைக்களம்

தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காக மதவழிபாட்டுத்தலங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் மதவழிபாட்டு தலங்களை துஷ்பிரயோகம் செய்து வருவதாக தெரியவருகின்றது.

ஓருவர் 1981ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின்படி இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் ஓருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவரிற்கு ஓருவருட கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அத்துடன் ஏழுவருட காலத்திற்கு தேர்தலில் வாக்களிப்பதற்கு தடைசெய்யப்படலாம், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் அவரது பதவி பறிபோகலாம் எனவும் ஆணையக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts