Ad Widget

சட்டவிரோத நியமனங்கள், பதவி உயர்வுகள் குறித்து அதிக முறைப்பாடுகள்!

பொதுத் தேர்தல் தொடர்பில் 304 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம்
தெரிவிக்கின்றது.

சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் அதிகப்படியான 118 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின்
முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தவிர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிபடுத்தப்பட்டமை குறித்து 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

பொருட்கள் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் 47 முறைப்பாடுகளும் அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்திமை தொடர்பில் 36 முறைப்பாடுகளும் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ளன.

அரச ஊழியர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் பத்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகபடியான தேர்தல் முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணிகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இம்முறை பொதுத் தேர்தல் கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள 110 சர்வதேச கண்கானிப்பாளர்கள் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

Related Posts