தேசிய அபிவிருத்தி நிலையத்தில் பிராந்திய நிலையங்கள் மூலம் “முதியோர் பராமரிப்பு டிப்ளோமா” “சமூக பராமரிப்பு டிப்ளோமா”கற்கை நெறிகளை பயில்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேற்படி பாடநெறிக்கான வகுப்புக்கள் வாராந்தம் சனி ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ளன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க கூடியதாக பதிவாளர் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் 488A, நாவல வீதி, இராஜகிரிய என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் க.பொ.த உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.