நடைபெற உள்ள இலங்கை பாராளுமன்றத்தேர்தல் தொடர்பில் தமிழ்மக்களின் முன் முக்கிய போட்டித்தெரிவுகளாக வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இருக்கின்றன. வழமைபோல இணையத்தளங்கள் தேர்தல் கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளன. இன்று ஒவ்வொருவரும் எதோ ஒரு வகையில் இணையத்துடன் இணைந்துள்ள நிலையில் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களின் கருத்துக்கள் வாக்காளர்களிள் எண்ணங்களை பிரதிபலிப்பவையாக உள்ளன.
யாழ்பாணத்தினை தளமாககொண்டு இயங்கும் உதயன் பத்திரிகையின் இணையத்தளம் மற்றுமு் e-jaffna இணயத்தளங்களில் தற்போது கருத்துக்கணிப்புக்கள் இடம்பெறுகின்றன. அவற்றின் முடிவுகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன்னணியில் இருப்பதையும் அவர்னே கூடுதலான ஆசனங்களை இம்முறை பெறப்போவதாகவும் கூறுகின்றன.
இளைஞர்கள், மாணவர்கள் ,பல்கலைக்கழக சமூகம் , கல்விமான்கள் மற்றும் வைத்தியர்கள் வணிகத்துறையில் உள்ளவர்கள் மாற்றம் ஒன்றை வலியுறுத்துகின்றனர் அல்லது விரும்புகின்றனர் என்பதை இந்த முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முன்னணிக்கு வாக்களித்தவர்கள் கூறும் காரணமாக நீண்டகாலமாக் வீட்டுக்கு வாக்களித்து தாம் எதையும் சாதித்து விடவில்லை என்றும் வயது வந்தவர்களின் கூட்டமைப்பாக உள்ள கூட்டமைபிற்கு ஓய்வு கொடுத்து துடிப்பான முன்னணியினரின் கையில் தமிழ்தேசிய அரசியலை ஒப்படைப்பது அவசியமாகின்றது என்பதாக உள்ளது.
இன்றைய (16) நிலையில் சில வாக்கெடுப்பு முடிவுகள் தரப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் இம்முறை தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியே அமோக வெற்றியீட்டும் என் எதிர்பார்க்கப்படுகின்றது .