தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரச்சாரக்கூட்டம் தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் வருகின்ற 18.7.2015 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. முன்னதாக வேட்புமனுத்தாக்கலை அம்பாறையில் ஆரம்பித்து வன்னியில் முடித்தது.
தற்போது பிரச்சாரக்கூட்டத்தினை தமிழர்களின் கோட்டை எனப்படும் கோணமலையில் ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் திருகோணமலையில் முன்னணியின் தலைமைச்செயலகமும் ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது. மக்களை திரண்டுவந்து தமிழ்தேசிய அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான ஆதரவை தருமாறு முன்னணியின் பிரச்சாரப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது