ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது 7 பேரின் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும் மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்டதால் வழக்கை 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
21ஆம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.