பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்து 03 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் 38 வயதுடைய ஒரு ஆணும் 33 வயதுடைய ஒரு பெண் மற்றும் 01 வயதுடைய குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் இவர்கள் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு பாணந்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆண் பெண் இடையே காணப்பட்ட தகாத உறவே தற்கொலைக்கான காரணம் என்று தெரியவந்தள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.