தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறது. ஏற்கனவே அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வேட்புமனு தாக்கல் செய்கிறது,நேற்றிரவு முன்னணியின் தலைவர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேட்புமனுவில் கைச்சாத்திடார்
யாழ்ப்பாணப்பட்டியல் வருமாறு
(1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.ம.மு தமிழ்காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் )
(2) செல்வராஜா கஜேந்திரன் (முன்னாள் நா.உ, முன்னணி செயலாளர்)
(3) வி. மணிவண்ணன் (சட்டத்தரணி , முன்னணி தேசிய அமைப்பாளர்)
(4) சி.ஆனந்தி (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன் கல்லூரி, பேராதனை அரசியல் விஞ்ஞான பட்டதாரி)
(5) தே.சுதா்சன் – (குருநகர் பாடும் மீன் விளையாட்டுக்கழக உப தலைவர் )
(6) விரிவுரையாளர் அ.இராசகுமாரன் (யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்)
(7)தி.சிவகுமாரன் – யாழ் பல்கலைக்கழக பட்டதாரி – தீவகம்
(8) பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நா.உ)
(9) சி.கோகிலவாணி – கிளிநொச்சி(சமூக சேவகி, விடுதலைப்போராட்ட பங்காளி)
(10)ஜெ.வீரசிங்கம் (வீரா)- தொழிற்சங்கவாதி , யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
பட்டியலில் பெண்களுக்கும் இணைஞர்களுக்கும் கல்விமான்களுக்கும் போதுமான இடம் வழங்கப்பட்டிருப்பதாக முன்னணியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன