Ad Widget

சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டியை வலியுறுத்தியே தேர்தல் விஞ்ஞாபனம்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையை அடிப்ப­டையாகக் கொண்ட சமஷ்டி முறையை வலியுறுத்தியே எமது தேர்தல் விஞ்ஞாபனம் அமையும் என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்­னம்பலம் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையில் மாற்ற­மில்லை எனவும் குறிப்­பிட்டார்.

பொதுத் தேர்தல் தொடர்­பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்ன­ணியின் செயற்பாடுகள் குறித்து வினவியபோதே மேற்­கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், வட–கிழக்குத் தமிழர் தாயகங்­களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி தனித்துக் களமிறங்கவுள்­ளது. நாம் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையிலி­ருந்து விலகாது தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம். இதில் எவ்வித மாற்றமுமில்­லாது தொடர்ந்தும் மக்கள் சேவையினை மேற்­கொள்வோம்.

 

எமது தேர்தல் விஞ்­ஞாபனம் தயாரிக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்­றன. தமிழர் தேசம் அங்கீகரிக்கப்­பட்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இறைமையைக் கொண்ட சமஷ்டி முறையை எமது விஞ்ஞாபனம் பிரதான விடயமாகக் கொண்டிருக்கும்.
சுயநிர்ணய உரிமையுடன் தனித் தேசத்தில் தனித்துவமாக வாழ்­வதே கடந்த காலத்தில் தமிழ் மக்­களின் தியாகங்களுக்கு விலை­யாக அமையும் என்ற நிலைப்­பாட்டில் உறுதியாக­வுள்ளோம்.
அத்துடன் எமது தேர்தல் விஞ்ஞா­பனத்தில் போருக்கு முன்னரும் பின்னரும் காணாமல் போனவர்கள் விடயம் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தமிழ் மக்களின் மீள்குடி­யேற்றம் காணிகள் அபகரிப்பு, இராணுவ மயமாக்கல், திட்ட­மிட்ட குடியேற்றங்கள், பொரு­ளாதார ரீதியில் எம்மை சுரண்­டுதல் ஆகிய விடயங்களும் உள்ள­டக்கப்படவுள்ளன.
வட–கிழக்கில் திட்டமிட்ட கட்ட­மைப்பு சார் இன அழிப்புக்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்துள்ளது. இச் செயற்பாட்டை நாம் தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளோம்.மக்கள் தமிழ்த் தேசியத்தின் பால் நின்று எமக்கான ஆணையை நிச்சயம் வழங்குவார்கள் என்றார்

Related Posts