Ad Widget

அனுமதி பத்திரம் இன்றி மாடுகளை வெட்ட முயன்ற இருவர் கைது : விற்பனையாளர்கள் கடையடைப்பு

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாவாந்துறை,கல்வியங்காடு,பாசையூர்,அரியாலை , சின்னகடை ,பண்ணை ஆகிய கடைகளின் 30 உரிமையாளர்கள் குறித்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த கடையடைப்பு தொடர்பில் தெரிய வருவது,

இன்று காலை 6.30 மணியளவில் பண்ணையில் அமைந்துள்ள கொள்களத்தில் வைத்து வெட்டதயாராக இருந்த 4 மாடுகளை கொண்டு சென்றதுடன் அதனை வெட்ட இருந்த இரண்டு நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனால் குறித்த கடை உரிமையாளர்கள் மாநகர ஆணையாளர் பிரணவநாதனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவிருந்தனர்.

எனினும் குறித்த கொள்களத்தில் வைத்து அனுமதி பத்திரம் இல்லாமல் 4 மாடுகளை வெட்டத் தயாரான நிலையிலே குறித்த மாடுகளை கொண்டு சென்றதுடன் அனுமதி பத்திரம் இல்லாமல் மாடுகளை வெட்டவிருந்த நபர்கள் இருவரையும் தாம் கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts