மஹிந்த விடயத்தில் எனக்கு அதிகாரமில்லை! – இப்படிக் கூறுகின்றார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்புமனு வழங்குவது தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், இருப்பினும் அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குத் தமக்கு அதிகாரமில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என பிரஜைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறப்பிட்டதாக தொழிற்சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்புமனு வழங்வதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த தாம் உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்தனர் எனவும் இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாகவும் சமன் ரத்னப்பிரிய கூறியுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்புமனு வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி உறுதியான கருத்தொன்றைக் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts