Ad Widget

திடீரென பின்வாங்கினார் அனந்தி?

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற நோக்கத்தை கை விட்டு விட்டார் என்று இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.எனினும் அவருடன் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் சந்தர்ப்பம் கேட்டு இருந்தார். ஆனால் வழங்கப்படவில்லை.தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தூது அனுப்பி பார்த்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடியாக வருமாறு பணித்துவிட்டதாக அறியவருகின்றது
சுயேச்சையாக களத்தில் இறங்குகின்ற ஜனநாயக போராளிகள் கட்சியின் கதவுகள் இப்போது வரை இவருக்காக திறக்கப்பட்டுத்தான் உள்ளன. ஆனால் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுடன் சேர்ந்து செயற்படுகின்றமை எதிர்காலத்துக்கும், பாதுகாப்புக்கும் நல்லது அல்ல என்று அதில் களமிறங்கவில்லை.
இவர் சுயேச்சைக் குழுவாக போட்டியிட விண்ணப்பப் படிவம் வாங்கி வைத்திருக்கின்றார். ஆனால் போதுமான  ஆட்கள் இதுவரை கூட்டுச் சேரவில்லை.
இதே நேரம் இவர் ஒதுங்கி இருக்கின்ற பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமையிடம் இருந்து நன்மைகள் கிடைக்கும் என கூறப்பட்டிருப்பதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts