நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பா.உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரன் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தமிழ் தேசியத்தின் அடையாளம் தலைவர் பிரபாகரனும் போராளிகளுமே என தெரிவித்துள்ளார்
இச்செவ்வியின் போது காணாமல் போனோர்கள் தொடர்பான விடயம் ஐ.நா சபையில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை தரும் என தெரிவித்துள்ள அவர் முன்னாள் போராளிகள் தேர்தலில் பங்குபற்றுவது தொடர்பாக எழுந்துள்ள கருத்து நிலைகள் தொடர்ப்பாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதே வேளை கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் யோக ரட்ணம் யோகி ஆகியோரை தேர்தலில் இறக்குவது தொடர்பாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் கருத்து வெளியிட்டதாகவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒண்மையான புலிகள் போரில் அறந்துவிட்டனர் என கூறியதான செய்தி வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது