கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காணாமற்போன உடுவில், மானிப்பாய் வீதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தரான பிறேம்குமார் நிந்துஜன் (வயது 30) மற்றும் அவருடைய மகன் நிந்துஜன் தரணிகன் (வயது 03) ஆகியோரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
இவர்கள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில அவருடைய மனைவியால் ஒரு வருடத்துக்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர் சம்பந்தமான எந்தவொரு தகவலும் இது வரையில் கிடைக்கப்பெறாத நிலையில் இவர்கள் சம்பந்தமான விவரங்களைத் தந்துதவும் படி சுன்னாகம் பொலிஸாரினால் பொது மக்களிடம் இருந்தும் கோரப்பட்டுள்ளது.
இவர்கள் சம்பந்தமான தகவல் தெரிந்தவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கம் 0212240323 அல்லது பொறுப்பதிகாரி 0774673943 தொலைபேசியுடனோ தொடர்பு கொள்ளும்படி வேண்டப்பட்டுள்ளது.