யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குலுடன் சம்பந்தப்பட்ட மற்றொரு சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியவிளான், இளவாலையை சொந்த முகவரியாகவும், ஏழாலை வடக்கு, ஏழாலையை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காணொளி ஆதரங்களுடன் குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ். நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்குத் தொடர்பாக நாளைமறுதினம் 10ஆம் திகதி 37 சந்தேக நபர்கள் முற்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.