தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் நபர்களும் இணைந்து முக்கூட்டை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குதிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இந்த புதிய கூட்டு போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பு மனு வழங்காமல் விடப்பட்ட உறுப்பினரையும் இணைந்துகொண்டே இந்த முக்கூட்டை அமைக்கப்படவுள்ளதாகக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்திருந்தும் வேட்பு மனு கிடைக்காத வடமாகாண சபையை சேர்ந்த ஒருவருடனேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தெரியவருகின்றது.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவிருக்கின்ற வேட்பாளர்களின் விவரங்களை கூட்டமைப்பு வெளியிடாத நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.