எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளமை ஆகிய காரணங்களினால் இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள பாடசாலைகள் தவிர்ந்து ஏனைய அனைத்து பாடசாலைகளும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் 3ஆம் தவணைக்காக ஆரம்பிக்கப்படும் என்றும் பரீட்சை நடைபெறவுள்ள பாடசாலைகள் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.