நாட்டை பாதுகாத்து கௌரவப்படுத்தும் மாணவ சமூதாயம் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்தக் கூடிய ஆளுமையுள்ள பிரஜைகள் ஆசிரியர்களினால் உருவாக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் யாழ். மத்திய கல்லூரியில் 4.1 மில்லியன் ரூபா செலவில் இளைஞர்களுக்கான நாளை அமைப்பினால் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பில் உள்ள பாடசாலைகளின் வசதி வாய்ப்புக்கள் எல்லாம் கிராமப்புற பாடசாலைகளுக்கு செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.
மாணவ சமூதாயம் சுகந்திரமாக கல்வி கற்பதற்குரிய வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த நாட்டை அபிவிருத்தியில் இயங்க வைப்பவர்களாக இருக்க வேண்டும்
எனது நண்பன் டக்ளஸ் இந்த யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவர். இன்று அமைச்சராக இருக்கிறார். இவரைப் போன்று பல அமைச்சர்களை மத்திய கல்லூரி உருவாக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை கௌரவப்படுத்தும் மாணவ சமூதாயம் உருவாகுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று மஹிந்த குறிப்பிட்டார்.
மஹிந்த இவ்வாறு உரையாற்றும் போது மாணவர் கரகோஷம் மண்டபத்தை அதிர வைத்ததுடன், டக்ளசை புன்னகைக்கவும் வைத்தது என தெரியவந்துள்ளது.