வடக்கு – தெற்கு முதியோர் நட்புறவு

சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு, தெற்கிலுள்ள முதியோர்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்தும் இணைப்புத்திட்ட நிகழ்ச்சியொன்று, கைதடி முதியோர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடைபெற்றது.

தெற்கிலிருந்து அழைத்து வரப்பட்ட 125 முதியவர்கள், கைதடி முதியோர் இல்ல முதியவர்களுடன் இணைந்து கலை நிகழ்வுகளை நடத்தினர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதியோர் சங்க உறுப்பினர்களே இவ்வாறு வருகை தந்தனர்.

முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் இந்த நிகழ்வை ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts