Ad Widget

கே.எப்.சி.யில் பொரித்த கோழிக்கு பதில் பொரித்த எலி கொடுத்ததாக பரபரப்பு

கே.எப்.சி.யில் பொரித்த கோழிக்கு பதில் பொரித்த எலி கொடுத்ததாக முகப் புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படமொன்றால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

KFC-RAT

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வோட்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் டிவோரைஸ் டிக்சன். இவர் அங்குள்ள கே. எப். சி . உணவகத்துக்குச் சென்று பொரித்த கோழி ஒன்றை கேட்டுள்ளார். எனினும் தனக்கு கோழிக்குப் பதில் பொரித்த எலியை கொடுத்ததாகவும் கூறி, அந்தப் படத்தையும் தனது முக நூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இப் படமானது உலகம் முழுவதும் இணையதளங்களில் வேகமாகப் பரவியது.

தனது பேஸ்புக்கில் பொரித்த கோழிக்கு பதில் தனக்கு பொரித்த எலி வந்ததாக தான் கே.எப்.சி.யில் சென்று கூறியதாகவும்.அதன் மேலாளர் தன்னிடம் மன்னிப்பு கோரியதாகவும், உங்கள் பாதுகாப்புக்காக துரித உணவு உண்ணாதீர்கள் என கூறி உள்ளார்.

ஆனால் இதனை அந்த உணவகம் மறுத்து இருக்கிறது. எங்களது பொரித்த கோழி பல உருவங்களில் கிடைக்கும். ஆனால் நாங்கள் எலி உருவில் எந்த உணவையும் கொடுப்பதில்லை. இந்த பிரச்சினை தொடர்பாக இது வரை எங்களுக்கு முறைப்பாடு எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Posts