சிம்பு நடித்துள்ள கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் விபூதி பட்டை போட்டு நடுவே குங்குமம் வைத்து பக்திப்பழமாய் காட்சித்தருகிறார் சிம்பு.
இந்த போஸ்டர் டிவிட்டரில் டிரெண்ட் ஆனதோடு நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளது. சிம்பு தனது படங்களில் எப்போதுமே ஸ்டைலிஸ் ஆகவே காட்சி தருவார். ஆனால் செல்வராகவன் இயக்கத்தில் கான் என்ற படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது.
அதில் பச்சை சட்டை, கழுத்தில் கொட்டை நெற்றியில் பட்டை என பக்திப்பழமாய் காட்சி தருகிறார் சிம்பு.
கான் என்ற எழுத்திற்கு கீழே காடும் காடு சார்ந்த பகுதியும் என்ற கேப்சன் போட்டுள்ளனர்.
கான் என்றால் காடு என்று அர்த்தமாம். இந்தப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கேத்தரின் மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கிறார்.
இப்படத்தில் டாப்சி ஒரு தைரியமான கவர்ச்சியான பாத்திரத்தில் நடிக்கிறாராம். செல்வராகவன் சிம்பு இணைந்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.