கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரை அச்சுறுத்தியமை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தொண்டமான் நகர் கிராமத்தில் புகையிரத வீதி, மற்றும் ஏ9 வீதி புனரமைக்கப்பட்டதன் பின்னர் கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குடியிருப்பு வீதிகள் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றன.
இந்த வீதிகளை புனரமைத்து தருமாறு குறித்த கிராம மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் இப்பகுதி மக்கள் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினை நடார்த்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அக்கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரையும் அவரது தாயாரையும் குறித்த பிரதேச சபையின் உப தவிசாளர் தாகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தார்.
அவ்வாறு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் பட்சத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.
இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.