இலங்கையையும் இந்தியாவையும் தரை வழியாக இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புகின்றன என இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா நேற்று மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.இதன்போதே மேற்கண்ட விடயத்தை நிதின்கட்காரி கூறினார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 23 ஆயிரம் கோடி இந்திய ரூபா – இலங்கை மதிப்பில் சுமார் 58 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தத் திட்டம் தயாராகிறது எனவும் அவர் இதன்போது சொன்னார்.
இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது. அல்லது பாம்பன் நகரையும் தலைமன்னாரையும் (29 கிலோமீற்றர்) இணைப்பது எனக் கூறிய அவர் இது இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின் கீழால் சுரங்கப்பாதை அமைத்து இணைக்கவும் திட்டமிடப்படுகின்றன எனத் தெரிவித்தார்.