தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு, முழு விபரங்கள் அடங்கிய பற்றுச்சீட்டை வழங்குவது, நவம்பர் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விபரங்கள் அடங்கிய பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கத் தவறும் வைத்தியசாலைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்தது.
மருந்து வழங்கும் வைத்திய சேவை மற்றும் மருந்து விபரங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதென்பது நோயாளர்களின் உரிமையாகும்.
அதை வழங்கத் தவறும் தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தெரிவித்தார்.