யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களின் பெற்றோல் தாங்கியின்மேல் பிள்ளைகளை இருத்திக் கொண்டு பயணிப்பவர்கள் மீது பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.கே.ஜெயவன்ச தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் –
எதிர்காலத்தில் போக்குவரத்து பொலிஸார் வீதி போக்குவரத்து நடைமுறைகளை மீறும் வாகன சாரதிகள் விடயத்தில் இறுக்கமான நடவடிக்கைகளை மேற் கொள்ளவுள்ளார்கள்.
இந்த வகையில் எதிர்காலத்தில் வாகன விபத்துக்களில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதேபோன்று தலைக்கவசம் அணியாது செல்பவர்கள், போக்குவரத்த விதிகளை மீறுபவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற வகையில் வாகன விபத்துக்களினால் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இதனையிட்டு போக்குவரத்து வீதிகளை மீறுபவர்கள் மீது எதுவித பாரபட்சமும் இன்றி உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.