சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
சிறுவர் தொழிலை எதிர்ப்போம் என்பதே இம்முறை சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
குழந்தை தொழிலாளர் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.