வவுனியா பிரதேச வர்த்தகர் ஒருவரின் பிள்ளையை கடத்தி கப்பம் கோரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 9ம் திகதி காலை முன்பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 5 வயது ஆண் பிள்ளை இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட பிள்ளையை விடுவிக்க கடத்தல்காரர்கள் 30 லட்சம் கப்பம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தல்காரர்களுக்கு 10 லட்சம் ரூபா வழங்க பிள்ளையின் தந்தை நடடிக்கை எடுத்துள்ளதால் கடத்தப்பட்ட பிள்ளை விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையை விடுவித்துக் கொண்டதன் பின்னரே தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, கடத்தல் சந்தேகநபர்களை கைது செய்ய வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.