கணவரால், மனைவி அடித்து துன்புறுத்தப்பட்டதைப் பார்த்து கொண்டிருந்த வளர் ப்பு நாய் ஒன்று குறித்த நபர் மீது ஆவேசமாகப் பாய்ந்து கடித்து குதறிய சம்பவம் ஒன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
வளர்ப்பு நாயின் கடிக்கு உள்ளான நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த நப ரின் உடலில் 35 இடங்களில் நாய் கடித்துக்குதறிய காயங்களுடன் கீறல் காயங்களும் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. காயங்களுக்கு 21 தையல்களும் இடப்பட்டுள்ளன.
தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் குறித்த நபர் மனைவி, பிள்ளைகளுடன் சண்டையிடும் சந்தர்ப்பங்களிலெ ல்லாம் ‘அம்மு’ என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் குறித்த நாய் இடை நடுவே புகுந்து குரைப்பதும் அந்த நபரை கடிப்பது போல் பாசா ங்கு காட்டி வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவதினமான சனிக்கிழமை வழமைபோல் சண்டை நடந்த சம யம் குறித்த நாய் பலமாக குரைத்தும் சண்டையை நிறுத்தாதையடுத்து அந்நபரின் மீது ஆவேசமாக பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது. படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.