அனலைதீவு, 6ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த செவ்வராசா ரமேஸ் (வயது 36) என்பவரை புதன்கிழமை (03) தொடக்கம் காணவில்லையென அவரது உறவினர்கள் வியாழக்கிழமை (04) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத் தலைவரைச் சந்தித்துவிட்டு வருவதாக கடந்த புதன்கிழமை (03) வீட்டிலிருந்து புறப்பட்டவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமற்போனவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.