ஹோட்டல்ஸ் பிறைவேட் லிமிட்டட் நிறுவனத்தால் யாழில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 மாடி கொண்ட “ஜெட்விங் யாழ்” உல்லாச விடுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா (03.02.2012) வெள்ளிக்கிழமை மதியம் 01.00மணிக்கு நடைபெற்றது.ராஜன் ஆசீர்வாதம் தலைமையில் நடைம்பெற்ற இலக்கம் 37 மகாத்மா காந்தி வீதியல் புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில்,
பிரதமர் டி.எம் .ஜெயவர்த்தன,பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் மிலிந்த மெறகொட, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, மாநகரசபை முதல்வர யோகேஸ்வரி பற்குணராசா, யாழ் அரச அதிபர் இமல்டா சுகுமார் , யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி மகிந்த கத்துருசிங்க, ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இந்தப் புதிய கட்டடத்துக்கான நினைவுக்கல்லை பிரதமர் டி.எம் ஜெயவர்த்தன மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்தனர்.தொடர்ந்து இந்த நிகழ்வில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஷ வடபகுதியில் மேலும் பல அபிபிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறினார்.யாழ் மக்கள் தற்போது நிம்மதியாகவும், மகிழ்சியாகவும் இருப்பதாகவும், இங்குள்ள மக்கள் அனைவரும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைக்கவுண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
75 கோடி ரூபா செலவில் 14 மாடி கட்டிடமாக , 76அறைகள் கொண்டதாவும், 46பேச் நிலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த யாழ்.உல்லாச விடுதி 18 மாதங்களில் கட்டி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, யாழ்.இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்பை வழங்கும் நோக்குடன் இந்த ஜெட்விங் யாழ் உல்லாச விடுதி கட்டட நிர்மாணப் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த உல்லாச விடுதி ராஜன் ஆசீர்வாதம் என்ற தமிழருடைய பெயரில் ஆரம்பிக்கப்படுகின்றது.ராஜன் ஆசீர்வாதம் என்ற என்பவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்.இவர் முன்னர் சந்திரிக்கா ஜனாதிபதி யாகவிருந்த காலத்தில் அரச தரப்பின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது