தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுசரணையுடன் ஐக்கிய மொழிச்சங்கம் நடாத்தும் இலவச சிங்களமொழிப் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் தலைவர் வ.சிவச்சந்திரதேவர் தெரிவித்தார்.
இப்பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் 04 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பி.ப 3:00- 5:00 வரை வதிரி கரவெட்டியில் அமைந்துள்ள வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தில் நடைபெறும். இப்பயிற்சி வகுப்புகளில் அனைவரும் கலந்துகொள்ள முடியும்.
பயிற்சியில் பங்குபற்ற விரும்புவர்கள் தமது பெயர் விபரங்களை, தேசிய அடையாள அட்டை பிரதியுடன் வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தில் உள்ள ஐக்கிய மொழிச்சங்கத்தின் செயலாளர் ச.யாழியிடம் நேரில் அல்லது 0778648213 தொலைபேசி இலக்கம் மூலம் பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.