கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்;குட்பட்ட கிராமமான 2ஆம் கட்டை கோரக்கன்கட்டு என்னுமிடத்தில் வசிக்கும் சிறுமியாருவர், வெள்ளிக்கிழமை (29) மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கோரக்கன்கட்டு குடியிருப்பு என்னுமிடத்தில் வசிக்கும் இராசையா கமலேஸ்வரி (வயது 13) எனும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி காலையிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில், அவரின் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றநேரத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகித்த உறவினர்கள், கிணற்றைப்பார்த்த போது சடலத்தை கண்டுள்ளனர்.
கிராம அலுவலர் பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கியதை அடுத்து கிணற்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய் அரபு நாட்டில் வேலை செய்கிறார். வற்றாப்பளை அம்மன்கோவிலுக்கு திருவிழாவுக்கு தந்தை சென்;றுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சிவபாலசுப்பிரமணியம் சிறுமியின் சடலத்தை பார்வையிட்டபின் சடலத்தை உடல் கூற்றுப்பரிசோதனைக்கு உட்;படுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியின் சடலம் தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.