‘போர்க்களத்தில் ஒரு பூ’வுக்கு தடை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளரான இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு இந்திய மத்திய திரைப்படக்குழு, சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது.

2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட மோதல்களின் போது இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இசைப்பிரியாவை மையப்படுத்தி, இயக்குநர் கே.கணேசன் என்பவரால் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

இருப்பினும், இத்திரைப்படமானது வெளிநாடுகளுடனான நட்புறவை பாதிக்கும் எனக் காரணம் காட்டியே, அதற்கான அனுமதியை வழங்க மறுத்துள்ளது என தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் குழுவின் இந்த தீர்மானத்துக்கு இயக்குனர் கே. கணேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘இலங்கை எமது நட்புறவு நாடாக இருந்தால் என்ன?. தமிழ்நாடு அரசாங்கம் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் தனது சட்டசபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக’ அவர் குறிப்பிட்டார்.

Related Posts