Ad Widget

தமிழ் படிக்க ஆசைப்படுகிறார் பிரதமர் ரணில்!

தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் சில வாரங்களுக்கு முன்னர் கம்பன் விழா இடம்பெற்றது. இதில் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப் பாசனம், நீர் விநியோக அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது.

இலக்கியம் என்பது காலத்தை காட்டுகின்ற கண்ணாடி என்கிற வகையில் இவரின் தலைமைக் கவிதையில் உள்நாட்டின் சம கால அரசியல் பேசப்பட்டது. ஆனால் சக கவிஞர்கள் மாத்திரம் அன்றி, பேராளர்கள், சபையோர்கள் ஆகியோரும் இவரின் கவிதையை பெரிதும் இரசித்தனர். மறுநாள் பத்திரிகைகள் இக்கவியரங்கம் குறித்து செய்திகள் வெளியிட்டும் இருந்தன. அத்துடன் எம். ஏ. சுமந்திரன் எம். பி,  ஈஸ்பரபாதம் சரவணபவன் எம். பி போன்றோர் ரவூப் ஹக்கீமின் கவிதையை பிரதமரிடம் சிலாகித்து உள்ளனர்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதில் ஐக்கிய தேசிய கட்சியின் பங்கு, பங்களிப்பு ஆகியன குறித்தும் மிக அழகாக ஹக்கீம் கவிதை பாடி இருக்கின்றார் என்பது பிரதமரின் முகத்தை மலர வைத்தது. ஆயினும் சற்று நேரத்தில் அதில் சிறிய சோக ரேகையும் படரவே செய்தது.

இக்கவிதையை படிக்கின்றமைக்கு, இரசிக்கின்றமைக்கு தமிழ் மொழி தெரியாமல் போய் விட்டதே? என்று சொல்லி பிரதமர் ஆதங்கப்பட்டு கொண்டார்.

ஹக்கீம் பாடிய அக்கவிதையை காணொளியில்  செவிமடுக்கலாம்.

வீடியோ லிங்  https://www.youtube.com/watch?v=-mM_PUIeFDE

Related Posts