இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சில நிர்வாகிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமாயின் தேர்வாளர்கள் சிலருக்கு பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதென முறைப்பாடுகள் முன்வைக்கப்படடன.
இது தொடர்பில் ஆராய 2014ம் ஆண்டு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விசாரணை குழுவொன்றை நியமித்தார்.
இந்தக் குழு நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பிலான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொண்டமைக்காக குறித்த குழுவினருக்கு நவீன் திஸாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.