கமலின் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘விக்ரம்’. இதில், கமலுடன் சத்யராஜ், டிம்பிள் கபாடியா, லிசி ஆகியோர் நடித்து இருந்தனர். ராஜசேகர் இயக்கியிருந்தார்.
‘விக்ரம் விக்ரம்’, ‘வனிதா மணி’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’, ‘மீண்டும் மீண்டும் வா’ போன்ற இனிய பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்று இருந்தன. இப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.
தற்போது ‘விக்ரம்’ படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. சூர்யா இதில் நடிக்கிறார். கமலஹாசனின் ‘விக்ரம்’ படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறேன் என்று சூர்யா அறிவித்து இருக்கிறார்.
சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் வருகிற 29–ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படம் வெளியான பிறகு ‘விக்ரம்’ படத்தின் ரீமேக் வேலைகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.