நடிகர் விஜய் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு உதவிகள் செய்து ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்துள்ளார். தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு, மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள், இலவச கம்யூட்டர் பயிற்சி மையங்கள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், விஜய், கடந்த மாதம் நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போன நேபாள மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருந்து மற்றும் துணிமணிகளை தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனுப்ப முடிவு செய்தார்.
அதன்படி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இந்த பொருட்கள் அனைத்தும் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டது.
கஷ்டப்படுபவர்களுக்கு உதவிடும் வகையில் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் செய்துள்ள இந்த மனிதாபிமான நற்பணிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.