Ad Widget

ஜெயலலிதா விடுதலை

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா , சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டிருந்த தண்டனையில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பான 100 கோடி ரூபாய் அபராதம், 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ஆகிவற்றை நீதிபதி குமாரசாமி இரத்து செய்து இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கினார்.

900 பக்கங்கள் கொண்ட தீர்ப்பபை சுமார் 3 நிமிடங்கள் மாத்திரமே வாசித்த நீதிபதி குமாரசாமி, அங்கிருந்து எழுந்து சென்றுள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் போயஸ் கார்டனில் குழுமியிருந்த ஜெயலலிதா ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, நீதிமன்றம் மற்றும் பெங்களுரு முழுவதும் பொலிஸாரின் பலத்த காவலுக்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, போயஸ் கார்டன் முன்னிலையில் அதிக பொதுமக்கள் வருவதையடுத்து அங்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts