கோலிவுட்டில் ’ஒரு நாயகன் உருவாகிறான்’ என்பது போல் மெல்ல மெல்ல உச்சத்தை நோக்கி பயணிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் 5 படங்களுக்கு மேல் தான் முழு நீள ஆக்ஷன் கதையை தேர்ந்தெடுத்து நடித்தார்.
தற்போது இவருக்கு விபரீத ஆசை ஒன்று வந்துள்ளது. சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் ‘எனக்கு சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா படம் தான் மிகவும் பிடிக்கும்’ என்று கூறியுள்ளார்.
பேட்டி கொடுத்ததோடு மட்டும் இல்லாமல், நெருங்கிய நண்பர்களிடம் இப்படி ஒரு கதையை ரெடி செய்து வாருங்கள் என்று கூறி வருகிறாராம்