தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக அனைத்திலும் வெற்றி கொண்டு வலம் வருபவர் தனுஷ்.
தனுஷின் அடுத்த வெற்றி படமாக களம் காணப்போவது மாரி. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
ஏற்கனவே தனுஷ் – அனிருத் கூட்டணி நல்ல வரவேற்பபை பெற்றுள்ளதால் இப்படத்தின் பாடல்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதன் பாடல் வெளியீட்டு விழாவை இம்மாதம் 25ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர். அதோடு படத்தை ஜுலை 17ம் தேதி வெளியிடப்போவதாக திட்டமிட்டுள்ளனர்.