நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரபு மற்றும் பலர் சமீபத்தில் ஒரு பிரபல நகைக்கடையை திறந்து வைத்தனர். அந்த கடையின் விளம்பர படம் தற்போது ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் அமர்ந்திற்கும் போது, ஒரு கறுப்பின சிறுவன் குடை பிடித்திருப்பது போல சித்தரிக்கபட்டிருந்தது.
‘கருப்பாக இருப்பவர்கள் அனைவரும் அடிமைகள்’ என்பதை போலவே இது காட்டுவதாக அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த படத்தை இப்போது விளம்பரத்திலிருந்து நீக்கி விட்டு, மன்னிப்பு கோரியுள்ளனர்.