இன்டர்நெட்டில் பரவிய விஜய்யின் புலி கெட்டப்: படக்குழுவினர் அதிர்ச்சி

விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு தலக்கோணம் பகுதியில் விறுவிறுப்பாக நடக்கிறது. பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து காட்சிகளை எடுக்கின்றனர். விஜய்யின் அறிமுக பாடல் காட்சியை ஐந்து கோடி செலவில் அரங்கு அமைத்து படமாக்குகின்றனர்.

vijay-puli

இதில் விஜய் ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இந்த படத்தில் விஜய் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. அவரது கெட்டப்பும் வெளியிடப்படவில்லை.

விரைவில் விஜய் கெட்டப்பின் முதல் தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் இப்படத்தில் விஜய் கெட்டப் புகைப்படம் ஒன்று இன்டர்நெட்டில் திடீரென பதவி உள்ளது. யாரோ திருட்டுத்தனமாக மொபைல் போனில் அவரை படம் எடுத்து இணையதளத்தில் பரவ விட்டுள்ளனர்.

இதுகுறித்து புலி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை வித்யூலேகாராமன் சமூக வலைத்தளத்தில் கூறும்போது, ‘‘புலி படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக விஜய்யின் முதல் தோற்றத்தை வெளியிட திட்டமிட்டிருந்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டில் ஒன்று இன்டர்நெட்டில் வெளியாகி இருப்பது படக்குழுவினர் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது’’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த ஸ்டில்லை வெளியிட்டவர் யார் என்று விசாரணை நடக்கிறது.

Related Posts