யாழில் ரயில் பயணிகளின் நன்மை கருதி புதிய பேருந்து சேவைகள்!

கொழும்பிலிருந்து ரயில் மூலம் யாழ்ப்பாணம் வரும் அனைத்துப் பயணிகளும் தத்தமது இடங்களிற்கு செல்வதற்கு வசதியாக இலங்கை போக்குவரத்துச்சபையின் யாழ்.சாலையினால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாண ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களின் நேரத்திற்கும் எற்ப 776 பாதை வழியே குறிகட்டுவானுக்கும், 777,780 பாதைகள் வழியே ஊர்காவற்றுறைக்கும், 788 பாதை வழியே இளவாலைக்கும் 789 பாதை வழியே பண்டத்தரிப்பிற்கும் செல்வதற்குப் பயணிகளின் நன்மை கருதி பேரூந்துசேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சாலை முகாமையாளர் செ.குவபாலசிங்கம் தெரிவித்துள்ளார்

Related Posts