மே ஒன்றாம் தேதி கமலுக்கு மட்டுமின்றி ஸ்ருதிக்கும் முக்கியமான நாள். அன்று கமல் நடித்த உத்தம வில்லனும், ஸ்ருதி நடித்துள்ள கப்பார் இஸ் பேக்கும் திரைக்கு வருகின்றன.
தந்தை, மகளின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது அபூர்வம். அது மே ஒன்று நடக்கயிருக்கிறது. கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லன் மே 1 திரைக்கு வருகிறது.
அதேநாளில் ஸ்ருதி நடித்துள்ள கப்பார் இஸ் பேக்கும் வெளியாகிறது. தமிழ் ரமணாவின் இந்தித் தழுவலான இதில் அக்ஷய் குமார், கரீனா கபூர் ஆகியோருடன் ஸ்ருதியும் நடித்துள்ளார்.
இந்த இரு படங்களில் எது வெற்றி பெறும்? இரண்டுமே வெற்றி பெறுமா? மே 1 தெரிந்துவிடும்.