லாரன்ஸ் கெட்டப்பை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள ‘காஞ்சனா–2’ தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது.

இந்த படம் நாளை ரிலீசாகிறது. காஞ்சனா படம் ஏற்கனவே ஹிட்டானதால் 2–ம் பாகமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

ragava-lawrance-kanjana

இந்த படத்தில் ‘லாரன்ஸ்’ 70 வயது கிழவியாக நடித்து படங்கள் ஏற்கனவே வெளிவந்தன. இது தவிர 7 வயது சிறுவனாகவும் லாரன்ஸ் இதில் நடித்துள்ளார். சமீபத்தில் ரிலீசான படத்தின் டிரெயலரில் இந்த கெட்டப் இடம் பெற்று உள்ளது.

லாரன்சின் 7 வயது தோற்றத்தை பார்த்து ரஜினி வியந்தார். உடனடியாக அவரை தொடர்பு கொண்டு இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நீ நடித்திருக்கிறாய். உனக்கு அந்த ராகவேந்திரர் ஆசி எப்போதும் உண்டு. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று பாராட்டினார்.

தமிழ், தெலுங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் டாப்சி, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

Related Posts