புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில்

புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில் சோமாவதி புனித பூமியில்புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) சோமாவதி புனித பூவியில் நடைபெற்றது.

Somawathi-2

அறுவடை செய்யப்பட்ட புது அரிசியின் முதற்பகுதியை புத்தபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. அடுத்த விளைச்சல் செழிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பூஜை செய்யப்பட்டது.

விவசாயிகளுடன் அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி சோமவதி விகாரைக்கு பாற்சோறு வைத்து பூஜை செய்தார்.இதனையடுத்து சோமாவதி விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பாகமுனே சுமங்கல தேரரை சந்தித்து நலன் விசாரித்தார்.

வெள்ளத்திலிருந்து சோமவதி புனித பூமியை காப்பதற்கான பாதுகாப்பு வேலியமைக்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

Related Posts