அஜித்-சிவா இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் அஜித்துக்கு 56-வது படமாகும். சிறுத்தை சிவாவும், அஜித்தும் ஏற்கெனவே ‘வீரம்’ படத்தில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்துள்ளனர். தற்போது இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

ajith-56-filim

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் தேர்வாகியுள்ளார். மேலும், அனிருத் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது.

இதில் இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பூஜை போடப்பட்டதையடுத்து விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.

அஜித்-ஷாலினி தம்பதியருக்கு சமீபத்தில்தான் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது குழந்தையையும், ஷாலினியையும் கண்ணும் கருத்துமாக கவனித்து வரும் அஜித், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts