இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது போன்று 5000 ரூபா மஹாபொல புலமை பரிசில் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (07) உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் சட்ட திருத்தம் குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
100 வேலைத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
புதிய தேர்தல் முறை ஒன்றை அறிமுகப்படுத்த தேசிய நிறைவேற்று சபை இணங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதன்படி தேர்வுக்குழு ஊடாக சட்டமூலம் தயாரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.